’குருவிக்காரன்’ ஆக நடிக்கும் யோகி பாபு: புது அப்டேட்!

Published On:

| By Monisha

yogi babu next movie update

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, லக்கி மேன் உள்ளிட்ட பல படங்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

சமீபத்தில் நடிகர் விதார்த்துடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ள ‘குய்கோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் ‘குருவிக்காரன்’ என்ற படத்தில் நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான சசிகுமார் குருவிக்காரன் டைட்டில் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

குருவிக்காரன் படத்தை ராக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ரமணா பாலாஜி மற்றும் பத்மாவதி திவாகர் இணைந்து தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

யோகி பாபுவின் குருவிக்காரன் படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்‌.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

’தா.ம.கா எந்த கூட்டணியில் உள்ளது?’: ஜி.கே.வாசன் பதில்!

AK63: அஜித்தை இயக்கும் ஆதிக்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share