ஒரு எழுத்தாளனுக்கு இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? – நெகிழ வைத்த ராஜேஷ்குமாரின் பேஸ்புக் பதிவு!

Published On:

| By Kumaresan M

கடந்த 1980-களில் பலருக்கும் எழுத்தும் வாசிப்பும்தான் உயிர் மூச்சாக இருந்தது. குறிப்பாக பெண்களும் நாவல்கள், இலக்கியங்களை விரும்பி படித்தனர். அந்த காலக்கட்டத்தில் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்கள் சக்கை போடு போட்டன. லட்சக்கணக்கில் பிரதிகள் விற்று தீர்ந்தன. அப்போது, அவர் எழுதிய ‘சுகிர்தா இனி பொறுத்துக் கொள்ள மாட்டாள்’ என்கிற சிறு கதையும்  வெகு பிரபலம்.

இந்த நாவலை படித்த ராஜேஷ்குமாரின் தீவிர வாசகியான பெண் ஒருவர் சுகிர்தா என்ற  கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தில் அவர் கருவுற்றும் இருந்துள்ளார். அதற்கு பிறகு, அந்த பெண் செய்த காரியம்தான் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய கௌரவமாக அமைந்துள்ளது. ஆயிரம் விருதுகள், பணத்தால் கூட அத்தகைய கௌரவம் ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்காது. அப்படி அந்த பெண் என்ன செய்தார்?

இனி ராஷேஷ்குமாரே தன் பேஸ்புக் பதிவில் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். “இன்று காலை,கோவை தொண்டாமுத்தூர் மெயின் ரோட்டில் இருக்கும், தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகியிருந்த உறவினர் ஒருவரைப் பார்க்கச், சென்றிருந்தேன்.

அங்கே பணிபுரியும் Diabetic Specialist டாக்டர் சுகிர்தாவைச் சந்தித்துப் பேசிய போது , அவர் சொன்ன தகவல் இது. அவருடைய அம்மா, என்னுடைய தீவிர வாசகி என்றும், 1980 ம் ஆண்டு கல்கி வார இதழில் வெளிவந்து இலக்கிய சிந்தனை விருது பெற்ற என்னுடைய சிறுகதையான, ‘சுகிர்தா இனியும் பொறுக்க மாட்டாள்’ என்கிற சிறுகதையைப் படித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தனக்கு ‘சுகிர்தா’ என்று பெயர் வைத்ததாக கூறி என்னை ஆச்சரியப்பட வைத்தார்.

அன்றைய குழந்தை சுகிர்தா இன்றைக்கு ஒரு டாக்டர். ஒரு எழுத்தாளனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? என்று தன் பதிவில் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ஈரானிடம் அணுகுண்டு உள்ளதா? உலக நாடுகள் அச்சம்!

தமிழக மீனவர்கள் கைது… இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் பாமக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share