மழையுடன் குளிர்காற்றும் தாக்கும் மந்தமான சூழ்நிலையில் மனதுக்கு இதம் தரும் சூப் இந்த டொமேட்டோ – பிரெஞ்ச் ஆனியன் சூப். அனைவருக்கும் ஏற்ற சூப்பை டீ, காபிக்கு பதிலாக அருந்தி நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.
என்ன தேவை?
பழுத்த தக்காளி – 4
நறுக்கி நசுக்கிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளை பெரிய வெங்காயம் – 2
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைக்கவும். பெரிய கண் உடைய வடிகட்டியால் வடிகட்டவும். பிறகு சூப்பில் உப்பு (தேவைப்பட்டால்), சர்க்கரை, நசுக்கிய பூண்டு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கும்வரை சூடாக்கவும். மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…