தமிழகத்தில் அடித்து வெளுக்கப் போகும் கன மழை!

Published On:

| By Selvam

தமிழகத்தில் இன்று (நவம்பர் 29) 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளப் பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின்‌ காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தென்‌ தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை: இஸ்ரேல் தூதர் விளக்கம்!

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel