டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published On:

| By Selvam

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 28) வெளியானது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. 92 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வை தமிழகத்தில் 1.90 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்தநிலையில் முதல்நிலை தேர்வு முடிகள் இன்று வெளியானது. 2162 பேர் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள முதன்மை தேர்விற்கு தயாராகலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வுகளுக்கான முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

செல்வம்

அமித்ஷா பஞ்சாயத்துக்கு பிறகும் தொடரும் அதிமுக – பாஜக புகைச்சல்!

எடப்பாடி மீது குற்றப்பத்திரிகை: சேலம் நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel