தமிழ்நாட்டில் இன்றும் (மார்ச் 21), நாளையும் (மார்ச் 22) மழை நிச்சயம் இருக்கும் என, வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி அருகில் இருக்கும் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Ilaiyaraaja Biopic: வசனம்லாம் தெறிக்குமே… திரைக்கதை யாரு எழுதுறான்னு பாருங்க!
நாளை தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியங்கள் ஏற்படலாம்.
Ajith Kumar: ரொம்ப நல்லா இருக்கு… வைரலாகும் பிரியாணி வீடியோ!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்”, என தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடம் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் 38.6 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடலோர தமிழக மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விருதுநகர்: யார் இந்த சிந்துஜா? கடைசி வரை போராடிய மாணிக்கம் தாகூர்
சிவகங்கை: சிதம்பரத்தை சீண்டிய திருநாவுக்கரசர்
திருவள்ளூர்: ஜெயக்குமாரா? சசிகாந்த் செந்திலா?
’வரும் மார்ச் 31 ஞாயிறு வேலைநாள் தான்’ : வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு!