கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்

Published On:

| By Selvam

Sweet Potato Chaat Recipe

வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட், சத்துக்கள் நிறைந்த இந்த  ஷக்கர்கந்தி சாட். இந்தப் பருவத்தில் அதிகம் விற்பனைக்கு வரும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நீங்களும் இந்த சாட் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 250 கிராம்

சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைத்து, தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: சாப்பிடும் உணவு, தொண்டைக் குழியிலேயே நிற்கிறதா… தீர்வு என்ன?

கிச்சன் கீர்த்தனா: தேன், மா, இஞ்சி ஸ்பிரெட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share