சென்னை: தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

Published On:

| By christopher

சென்னை வண்ணாரப்பேட்டை ஜியோ சாலையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. நாய்களால் கடிபட்டு ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் நாள்தோறும் சராசரியாக 25 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சராசரியாக 150 பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மீது மோதாமல் இருக்க வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகின்றனர். இதனால் பலரும் விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை ஜியோ சாலையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். பள்ளி முடிந்து சாலையில் நடந்து சென்றபோது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் மாணவர்களை கடித்ததில் காலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்கள் வெறி நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய்க்கு இறக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.

அண்மையில் தெரு நாய்களின் பெருக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், ”தெரு நாய்களின் மீது இரக்கம் காட்டலாம். அதே நேரத்தில் அவற்றை சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிட அனுமதிக்கக்கூடாது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வது  சரியா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மங்களூர் மொச்சை கிரேவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share