தமிழகத்தில் முத்திரைத் தாள் விலையை மாற்றி அமைப்பதற்கான சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 17) தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி முத்திரைத் தாள் விலை மாற்றத்திற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
2001 ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் நீதித் துறை அல்லாத முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுவரை 20 ரூபாயாக இருந்த முத்திரைத் தாளின் விலை 200 ரூபாயாகவும் 100 ரூபாயாக இருந்த முத்திரைத்தாளின் விலை 1000 ரூபாயாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
அதேபோல், நிறுவன ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மோனிஷா