அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் (நவம்பர் 11) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதால் அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (நவம்பர் 11) திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
நாளையும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கனமழை பாதிப்புகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த் துறையினர், மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்டுத் தங்கவைப்பதற்காக முகாம்களும் தயார் நிலையில் இருக்கின்றன.
மோனிஷா