மிக்ஜாம் புயல் காரணமாக ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர கடலோரப்பகுதியில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது.
புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் தற்போது பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா