தொடர் மழை: உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தம் – 10,000 பேர் வேலை இழப்பு!

Published On:

| By christopher

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பளப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10,000 தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும்.

ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை எட்டிய நிலையில் விற்பனை போக ஒரு லட்சம் டன் உப்பு உற்பத்தி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பளப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மேலும், அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10,000 தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

இவர்கள் விவசாயம் உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்கின்றனர். இதையடுத்து உப்பத்தில் சேமித்து வைத்துள்ள உப்பை பனை ஓலைகள் மற்றும் தார்பாய்களைக் கொண்டு தொழிலாளர்கள் முழுமையாக மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

தற்போது ஒரு டன் உப்பு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை ஆகிறது. மழைக்கால விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்புக்குக் கூடுதல் விலை கிடைக்கும் எனவும் மீண்டும் மூன்றுமாத ஓய்விற்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: காய்கறிகளை இப்படித்தான் பத்திரப்படுத்த வேண்டும்!

மகளிர் பாதுகாப்பு, வானிலை தகவல் பகிர்வு: தவெக மாநாட்டுக்கு குழுக்கள் அமைப்பு!

புதுசு புதுசா நடக்குதே… சஹாராவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி!

வானில் வட்டமடித்த விமானம்: என்ன நடந்தது? எப்படி தரையிறக்கப்பட்டது?

10 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share