கழிவறையில் இருந்து வந்த விஷவாயு… அடுத்தடுத்து 3 பெண்கள் பலி : புதுச்சேரியில் அதிர்ச்சி!

Published On:

| By christopher

புதுச்சேரியில் கழிவறையில் இருந்து வந்த விஷவாயு தாக்கி, 3 பெண்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை இன்று (ஜூன் 11) காலை வீட்டு கழிவறையில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே போன்று 15 வயதான சிறுமி மற்றும் பெண்மணி அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே புதுநகர் பகுதி முழுவதும் உள்ள வீட்டு கழிவறைகளில் இருந்து விஷவாயு வெளிவந்ததை அடுத்து, அங்குள்ள பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற்றி, மாஸ்க் அணியும்படி போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அருகில் உள்ள  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியான விஷவாயு, வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து புதுநகர் பகுதி வழியாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் சாக்கடை கால்வாய்களை உடைத்து விஷவாயுவை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கு : தலைமறைவான உதவியாளர் கைது!

பயன்பாட்டுக்கு வந்த திருச்சி புதிய விமான முனையம் : விமானத்திற்கு வாட்டர் சல்யூட்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel