இன்றைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு பாஸ்தா. அந்த பாஸ்தாவில் சுண்டல் செய்து பரிமாறினால் குழந்தைகள் மட்டுமல்ல… பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
மக்ரோனி பாஸ்தா – ஒரு கப்
கடுகு – அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைப் பட்டாணி – கால் கப்
மாங்காய் – 2 டேபிள்ஸ்பூன் (சதுரமாக வெட்டியது)
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
தண்ணீரில் உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து, அதில் பாஸ்தாவை மிருதுவாக வேகவைத்து நீரை வடிகட்டவும். பச்சைப் பட்டாணியைக் குழையவிடாமல் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த பாஸ்தா, பச்சைப் பட்டாணி, தேங்காய்த் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். மாங்காய் துண்டுகள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…