நெல்லை டவுன் குற்றால ரோடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் அருகே நேற்று (ஜனவரி 16) இரவு மர்ம பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் குற்றால ரோடு பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் எதிரே உள்ள உணவகத்திற்கு ஐயப்பன் என்ற நபர் நேற்று இரவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் இரண்டு பேர் உணவகத்தின் வெளியில் நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்மநபர்கள் அவர்களை நோக்கி மர்ம பொருள் ஒன்றை வீசியுள்ளனர். அந்த பொருள் கீழே விழுந்து வெடித்ததில் பலத்த சத்தம் ஏறப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள் ஐயப்பன் மற்றும் அவரது உறவினர்களை விரட்டியுள்ளனர். இதனால் அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார் நெல்லை டவுன் குற்றாலம் சாலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மர்ம பொருள் வெடித்த இடத்தில் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.
இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மெலும், வெடித்த பொருள் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
செல்வம்