ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பெத்தாலியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 21) கடிதம் எழுதியுள்ளார்.
ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012, YAYA 1184, அல்ரெடா (ஒமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது.
இந்தநிலையில், மீனவர் பெத்தாலியை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலி மனைவி ஷோபா ராணி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.
ஓமன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலியை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…