கிச்சன் கீர்த்தனா: ஈஸி மதுரா பேடா

Published On:

| By Minnambalam Login1

mathura peda

தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த பண்டிகை நன்னாளில் தீபாவளி ஸ்வீட் பெட்டிகள் அணிவகுத்து நின்றாலும் நம் வீட்டில் செய்யப்படும் ஸ்வீட்டுக்குத் தனி சுவை இருக்கவே செய்யும். அதற்கு உதவும் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த ஈஸி மதுரா பேடா.

என்ன தேவை? 

இனிப்பில்லாத கோவா – ஒரு கப்
பொடித்த சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
இனிப்பில்லாத கோவா செய்ய…
பால் பவுடர் – ஒரு கப்
தண்ணீர் – தேவையான அளவு

அலங்கரிக்க…

நீளவாக்கில் நறுக்கிய பாதாம், பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பால் பவுடருடன் தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். இதைப் பாத்திரத்தில் போட்டு மூடவும். குக்கரில் இந்தப் பாத்திரத்தை வைத்து நான்கு விசில்விட்டு இறக்கவும். இதுவே இனிப்பில்லாத கோவா.
அடிகனமான வாணலியில் நெய்விட்டு உருக்கி, கோவாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை பிரவுன் நிறமாகியதும் இறக்கி ஆறவிடவும். கைபொறுக்கும் சூட்டுக்கு வந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பேடா வடிவத்துக்குத் தட்டவும். நடுவே கட்டை விரலால் சிறிய பள்ளம் செய்து பாதாம், பிஸ்தா தூவி அழுத்திப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஷாஹி ரசமலாய்!

கிச்சன் கீர்த்தனா: சோமாஸ்

ரியல் ஷூட்டிங்… கிளம்பும் விஜய்

தல தீபாவளி எப்ப வரும்? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share