மணிப்பூர் கலவரம்: மதுரை கல்லூரி மாணவிகள் போராட்டம்!

Published On:

| By christopher

மதுரை அருகே தனியார் கல்லூரி மாணவிகள் மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (ஆகஸ்ட் 3) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,  ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனிடையே குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.  இதனையடுத்து மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்தை கட்டுபடுத்த தவறிய ஆளும் பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை – திண்டுக்கல் செல்லும் வழியில் பரவை எனும் கிராமத்தில் மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.

இங்கு பயின்று வரும் மாணவிகள் மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளித்திட வேண்டும் என்று  கோஷம் எழுப்பி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னிமலை… சிவன்மலை… எரிமலை!: தீரன் சின்னமலைக்கு முதல்வர் மரியாதை!

11-வது நாளாக முடக்கம்: மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share