மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சிலிண்டர் கசிவு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து சுற்றுலா ரயில் மூலம் தமிழகத்திற்கு 60-க்கும் மேற்பட்டோர் ஆன்மீக சுற்றுப்பயணம் வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களுக்கு சென்றுள்ளனர். நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்நாபசாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளனர். ரயிலில் பயணித்தவர்கள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். இதனால் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 17-ஆம் தேதி லக்னோவிலிருந்து தமிழகத்திற்கு தனியார் கோச் புறப்பட்டது. நேற்று நாகர்கோவில் சந்திப்பில் புனலூர் – மதுரை (16710) ரயிலில் இந்த கோச் இணைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.47 மணிக்கு தனியார் கோச் மதுரை வந்தடைந்தது. புனலூர் ரயிலிலிருந்து தனியார் கோச் பிரிக்கப்பட்டு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டது.
அதிகாலை 5.15 மணியளவில் மதுரை ரயில் நிலையத்தில் தனியார் கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறை முயற்சியால் 7.15 மணிக்கு தீ அணைக்கப்பட்டது.
தனியார் கோச்சில் இருந்த சில பயணிகள் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் கொண்டு வந்துள்ளனர். கேஸ் கசிவு காரணமாக ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐஆர்சிடிபி போர்ட்டலை பயன்படுத்தி எந்தவொரு தனிநபரும் தனியார் பெட்டியை பதிவு செய்யலாம். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதியில்லை” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
கிரிமினல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
27ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்!
“கொடநாடு வழக்கில் எடப்பாடி சிறைக்கு செல்வார்” – மருது அழகுராஜ்