மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று விமரிசையாக நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 16) காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது.
இப்போட்டியில் மொத்தம் ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்றில் மொத்தம் 106 காளைகள் சீறிப் பாய்ந்தன. அதில் 18 காளைகள் பிடிபட்டன.
காளையை அடக்கி சிறப்பாக செயல்பட்ட 6 காளையர்கள் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
போட்டியில் சிறப்பாக களம் காணும் காளை உரிமையாளருக்கும் மற்றும் அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கும் முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் வழங்கபட உள்ளது.
இரண்டாவது இடம்பெறும் காளை உரிமையாளருக்கு காங்கேயம் நாட்டு பசு மாடும், மாடுபிடி வீரருக்கு Apache பைக்கும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
போட்டியைக் காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்துள்ள நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
100-வது நாள்: 25 ஆயிரத்தை நெருங்கும் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை!
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்… வேடிக்கைப் பார்க்கும் பாஜக : இரா.முத்தரசன்