இயல்பு நிலைக்கு திரும்பிய புறநகர் மின்சார ரயில் சேவை… ஆனால்!

Published On:

| By christopher

local Tains moved and express trains cancelled in Chennai

local Trains moved and express trains cancelled in Chennai

மிக்ஜாம் புயல் பாதிப்பினை தொடர்ந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்று (டிசம்பர் 7) வழக்கம்போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எனினும் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னை வந்தடையும் 19 முக்கிய ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 4ஆம் தேதி வீசிய மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல்வேறு இடங்களில் இயல்புநிலை திரும்பாத நிலையில், தொடர்ந்து 4வது நாளாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயல் மற்றும் கனமழை பாதிப்பால் ரயில் நிலையங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 30  நிமிடம் மற்றும் ஒரு மணி நேர இடைவெளியில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சிந்தாதிரிபேட்டை – வேளச்சேரி மார்க்கங்களில் புறநகர் ரயில் சேவை இன்று முதல் வழக்கமான அட்டணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேவேளையில் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் பல முக்கிய ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின் படி,

இன்று ரத்தான ரயில்கள்!

16031 சென்னை சென்ட்ரல் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி அந்தமான் எக்ஸ்பிரஸ்

20677 சென்னை சென்ட்ரல் – விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

12077 சென்னை சென்ட்ரல் – விஜயவாடா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்

20607 சென்னை சென்ட்ரல் – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

12007 சென்னை சென்ட்ரல் – மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ்

12675 சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ்

12243 சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்

12639 சென்னை சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

22625 சென்னை சென்ட்ரல் – பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்

12686 மங்களூர் சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

16160 மங்களூர் சென்ட்ரல் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்

20602 போடிநாயக்கனூர் – சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

06674 திருச்செந்தூர் – திருநெல்வேலி சிறப்பு எக்ஸ்பிரஸ்

16057 சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

16058 திருப்பதி – எம்.ஜி.ஆர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

16053 சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

16054 திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

06067 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

06068 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

புறப்படும் ரயில் நிலையங்கள் மாற்றப்பட்ட ரயில்கள்!

12656 சென்னை சென்ட்ரல் – அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் இன்று காலை 10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

12695 சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

12685 சென்னை சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

வேலைவாய்ப்பு : புலனாய்வுத் துறையில் பணி!

local Trains moved and express trains cancelled in Chennai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel