சிறுதானியங்களில் பலரால் விரும்பப்படுவது குதிரைவாலி அரிசி. வளரும் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகமாக காணப்படுகின்றன.
இந்த குதிரைவாலி அரிசி ரவையில் பைனாப்பிள் சேர்த்து இனிப்பான கேசரி செய்து சுவைக்கலாம். நாள் முழக்க சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருக்கலாம்.
என்ன தேவை?
குதிரைவாலி ரவை – ஒரு கப்
பைனாப்பிள் துண்டுகள் – கால் கப்
பைனாப்பிள் ஜூஸ் – கால் கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி முந்திரியைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் குதிரைவாலி ரவையையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டரை கப் நீர், பைனாப்பிள் ஜூஸ் கால் கப் சேர்த்து வேக விடவும். ரவை நன்கு வெந்ததும் இதில் பைனாப்பிள் துண்டுகள், முந்திரி, நெய் சேர்த்துக் கிளறவும். குதிரைவாலி பைனாப்பிள் கேசரி தயார்.
குறிப்பு:
குதிரைவாலி அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.