கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் கார்ன் சப்பாத்தி

Published On:

| By christopher

kitchen keerthana: Sweet corn chapathi

ஸ்வீட் கார்னில் நிறைந்துள்ள லூடீன் (lutein), பார்வைக் குறைபாடு, மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண் சிவந்துபோவது போன்ற பார்வைக் கோளாறுகளைச் சரி செய்யும் ஆற்றல் கொண்டது. மூளைச் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் இந்த ஸ்வீட் கார்ன் சப்பாத்தி அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை? 

ஸ்வீட் கார்ன், கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சர்க்கரை – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது? 

ஸ்வீட் கார்னை வேகவைத்துத் துருவவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ஸ்வீட் கார்ன் துருவல், தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை அரை மணி நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஸ்வீட் கார்னைத் துருவியோ, உதிர்த்து மிக்ஸியில் அரைத்தோ சேர்க்கலாம். ஒரு ஸ்வீட் கார்னுக்கு 10 சப்பாத்திகள் தயாரிக்கலாம்.

திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய்: பின்னணி இது தான்!

ராமநாதபுரத்தில் மோடியா? குதிரை வண்டிக் காரர் வரலாற்றை நினைவுபடுத்திய கனிமொழி 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel