அருப்புக்கோட்டையின் மிகவும் பிரசித்திப் பெற்ற பலகாரம் சீவல். இந்தச் சீவல் சுவைக்கு அருப்புக்கோட்டை மக்கள் மட்டும் அல்லர்; விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அடிமை. வழக்கமாக அரிசி மாவிலே செய்யும் சீவலை, சத்தான கேழ்வரகு மாவிலும் செய்து அசத்தலாம். தீபாவளி பலகாரப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
என்ன தேவை?
கேழ்வரகு மாவு – ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு – தலா கால் கப்
மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன்
வெள்ளை எள், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெள்ளை எள், வெண்ணெய், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துப் பிசையவும். மாவைக் கெட்டியாகவோ, தளரவோ பிசைய வேண்டாம். சரியான பதத்துக்குப் பிசையவும். கெட்டியாகப் பிசைந்தால் சீவல் கடினமாக இருக்கும். தளர்த்தியாகப் பிசைந்தால் சீவல் எண்ணெய் குடிக்கும். முறுக்கு பிழியும் குழலில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டுப் பிசைந்த மாவை நிரப்பவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மாவை ரிப்பன்களாகப் பிழிந்து வேகவைத்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதெல்லாம் நமக்குத் தேவையா கோபி? – அப்டேட் குமாரு
அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு விசிக எதிர்ப்பா?- எல்.முருகனுக்கு திருமா பதில்!