கிச்சன் கீர்த்தனா : பாசிப்பயறு வெல்ல சுண்டல்

Published On:

| By christopher

இன்னும் இரண்டு நாட்களில் நவராத்திரி தொடங்க உள்ள நிலையில்… அதற்கு டிரெய்லராக இந்த பாசிப்பயறு வெல்ல சுண்டல் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?
பாசிப்பயறு – அரை கப்

துருவிய வெல்லம் – அரை கப்
தேங்காய்த்துருவல் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?
வாணலியில் பாசிப்பயறை ஐந்து நிமிடங்கள் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர், இரண்டு முறை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பயறை குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக வறுத்த பின் துருவிய வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் கலந்து கொள்ளவும். வெல்லம் தேங்காயோடு சேர்ந்து வந்தபின் வேகவைத்த பயறைச் சேர்த்து கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி… மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

டிஜிட்டல் திண்ணை: கட்சியையும் கையிலெடுக்கும் உதயநிதி – மாவட்டப் பிரிவினை ரெடி…. மாசெக்கள் திகில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share