அடிக்கடி தோசையா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு, பாசிப்பருப்பை முளைக்கட்ட வைத்து இந்தத் தோசையைத் தயாரித்துக் கொடுக்கலாம். இந்த தோசையில் உள்ள வைட்டமின் சி, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். சருமம் பொலிவு பெறச் செய்யும். பற்களை உறுதியாக்கும். பற்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கும்.
என்ன தேவை?
பாசிப்பருப்பு – 100 கிராம்
பச்சரிசி – 25 கிராம்
கேரட் – 2
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு கேரட்டைத் துருவவும்; இன்னொரு கேரட்டைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பு, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் களையவும். இதனுடன் கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீரை விட்டு நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணீர் அதிகமாகச் சேர்த்துக் கரைத்து வைக்கவும். பாத்திரத்தில் வெங்காயம், கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துத் தோசைகளாக ஊற்றி, இதன் மேலே வெங்காயக் கலவை 2 டீஸ்பூன் தூவி, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டுத் திருப்பிப் போட்டுப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா : நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவது ஆபத்தா?