தீபாவளி நெருங்கி விட்டது, ஒவ்வொர் இல்லத்தரசியும் பண்டிகைக்கான பலகாரங்களைத் திட்டமிடுவதில் மும்முரமாக இருப்பார்கள். இந்த தீபாவளி செய்யக்கூடிய பலகார லிஸ்டில் இந்த மினி பெப்பர் தட்டையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
என்ன தேவை?
அரிசி மாவு – ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியில் பரப்பவும். அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதன் மேல் ஒரு ஜிப் லாக் கவரை வைத்து ஒரு சிறிய கிண்ணத்தால் அழுத்தவும். சிறிய மூடியால் வட்டமாக வெட்டி எடுக்கவும். இதேபோல் எல்லா மாவையும் மினி தட்டைகளாகச் செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மினி தட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதை தொட்ட நீ கெட்ட… அப்டேட் குமாரு
காமராஜர் குறித்து சர்ச்சைப் பேச்சு… வருத்தம் தெரிவித்தார் திமுக ராஜீவ் காந்தி