கிச்சன் கீர்த்தனா : தினை அரிசி சர்க்கரை பொங்கல்

Published On:

| By christopher

இன்று கோலாகலமாக தொடங்கும் நவராத்திரிக்கு நைவேத்தியமாகப் படைக்கவும், விருந்தினர்களுக்குக் கொடுத்து மகிழவும் சுவையான இந்த தினை அரிசி சர்க்கரை பொங்கல் உதவும்.
என்ன தேவை?
தினை அரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
பாகு வெல்லம் – இரண்டு கப்
முந்திரிப்பருப்பு – 8
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து மிதமான சூட்டில் வாசம் வரும் வறுத்துக் கொள்ளவும். பருப்பு சிவந்ததும் தினை அரிசியை சேர்த்துக் கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவை ஆறிய பின் மூன்று முறை கழுவி, அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் குக்கரில் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து ஆறு முதல் எட்டு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். கனமான கடாயில் தட்டிய வெல்லம், வேக வைத்த தினை அரிசி மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். தினை அரிசியோடு வெல்லம் கரைந்து திரண்டு வரும் வரை நடுவில் நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். பொங்கல் கெட்டியாகி வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இது என்னடா காந்திக்கு வந்த சோதனை? – அப்டேட் குமாரு

“இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும்” – விசிக மாநாட்டில் திருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share