வெறும் கீரையைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும், கீரை பிடிக்காதவர்களும் இந்த கீரை வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதில் மாவுச்சத்துடன் நார்ச்சத்தும் கிடைக்கும். இதில் சேர்க்கப்படும் இஞ்சி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
என்ன தேவை?
தோசை மாவு – ஒரு கப்
ஏதாவது ஒரு கீரை – அரை கப்
இஞ்சி, மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புதினா, கறிவேப்பிலை, மல்லி, முளைக்கீரை, வெந்தயக் கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி மாவில் கலந்துவிடவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஆம்லெட் போல ஊற்றி எடுத்து, வெங்காயச் சட்னியுடன் பரிமாறலாம்.
தகைசால் தமிழர் கி.வீரமணி: குவியும் வாழ்த்துகள்!
சிறப்பு விசாரணை குழு வேண்டும்: சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!