எளிமையாகச் செய்யக்கூடியதாகவும் அதேநேரம் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இல்லத்தரசிகளுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த டேட்ஸ் எள்ளு உருண்டை. நவராத்திரி கொலுவிலும் இந்த இனிப்பை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
என்ன தேவை?
பேரீச்சை – 200 கிராம்
எள் – 50 கிராம்
முந்திரி – 6
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
தேன் – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
எள்ளை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். பேரீச்சையை பொடியாக நறுக்கி, நன்கு மசிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டை களாக உருட்டி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்… மா.செ.க்கள் மாற்றத்துக்கு முன்னோட்டம்?
நயினார்… 4 கோடி… சிபிசிஐடி விசாரணை: தண்ணி குடித்த கேசவ விநாயகன்