கோடைக்காலத்துக்கேற்ற சிறந்த பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் வெப்ப நோய்கள் வராமல் பாதுகாக்க உதவும். இதில் ஸ்குவாஷ் செய்து வைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்தி வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
ஆரஞ்சுப் பழச்சாறு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – அரை கப்
ஆரஞ்சு எசென்ஸ் – 2 டீஸ்பூன்
ஆரஞ்சு ஃபுட் கலர் – சிறிதளவு (தேவைப்பட்டால்)
சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன்
ஸ்குவாஷ் செய்வது எப்படி?
ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக நறுக்கிப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் சர்க்கரையில் அரை கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரையைக் கரைய விடவும். இத்துடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆற விடவும். பிறகு ஆரஞ்சு ஜூஸ், எசென்ஸ், ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து வடிகட்டி பாட்டிலில் நிரப்பவும்.
ஜூஸ் கலக்குவது எப்படி?
கால் பங்கு ஸ்குவாஷில் முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து, ஜூஸ் டம்ளரில் ஊற்றி, ஐஸ் போட்டு ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்பு:
இந்த ஸ்குவாஷ் சில மாதங்கள் ஆனாலும் கெடாது. தேவைப்படும்போது சிறிது தண்ணீருடன் கலந்து அருந்தினால் அருமையான ஜூஸ் ரெடி.