GOLD RATE: நகைக்கடை பக்கமே போக முடியாது போல!

Published On:

| By Manjula

gold rate march 14 Chennai

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 14) ரூபாய் 200 அதிகரித்து ரூபாய் 49,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 அதிகரித்து ரூபாய் 6,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 224 அதிகரித்து ரூபாய் 53,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 28 அதிகரித்து ரூபாய் 6,693-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு ரூபாய் 1.50 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக சற்றே குறைந்து ஆறுதல் அளித்த தங்கம் தற்போது மீண்டும் அதிகரித்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 49,000 ரூபாயை கடந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 1.50 ரூபாய் அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது குறையுமா? இல்லை மீண்டும், மீண்டும் விலை ஏறி உச்சம் தொடுமா? என்பதை நாம் சற்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நவாஸ் கனிக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

WPL 2024 : தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டியில் டெல்லி அணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share