சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஏப்ரல் 7) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
அதிரடியாக விலை உயர்ந்து 45 ஆயிரத்தைக் கடந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது. நேற்று (ஏப்ரல் 6) 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.80 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.49,224-க்கும் ஒரு கிராம் ரூ.11 குறைந்து ரூ.6,153-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை சிறிதளவு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.80,200-க்கும் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.8-.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
நம்பியை தொடர்ந்து ஜி.டி.நாயுடுவாக உருமாறும் மாதவன்
பேனா நினைவு சின்னம்: மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்!