தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 23-11-2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 23) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் நேற்று விலை மாற்றமின்றி விற்பனையானது. இந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் சிறிதளவு உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.79,200-க்கும் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.79.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை எட்டிய மீட்பு பணிகள்!

கலிங்கப்பட்டி வரலாறு தெரியுமா? டாஸ்மாக் கடையை 24 மணி நேரத்தில் தடுத்து நிறுத்திய மதிமுக கவுன்சிலர் ஜீவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel