மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை!

Published On:

| By Monisha

gold and silver price today 08-12-2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 8) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை ரூ. 47 ஆயிரத்தை கடந்து இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. ஆனால் மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது.

நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.80,000-க்கும் ஒரு கிராம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

செங்கல்பட்டில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்!

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் தனுஷ் 51!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share