போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு

Published On:

| By Selvam

fake passport case no evidence

போலி பாஸ்போர்ட் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 12) தெரிவித்துள்ளது. fake passport case no evidence

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியில் இருந்த காலத்தில் அவரது மனைவி நடத்தும் டிராவல் ஏஜென்சி மூலம் போலி ஆவணங்கள் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூன்று மாதத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான வழக்கை விசாரித்து முடிக்க கியூ பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த விசாரணையை கண்காணிக்கும்படி எஸ்.பி.சி.ஐ.டி – ஐ.ஜிக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், போலி பாஸ்போட் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும்,

விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் வாராகி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி, கங்காபூர்வாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி,

“மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் டிஜிபி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான புகார்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசுக்கு டிஜிபி அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த தகவல் கடந்த செப்டம்பர் மாதம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அப்போது நீதிபதிகள், “அரசு கடிதம் கிடைத்தா?” என்று மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில், அதுகுறித்த தகவலை கேட்டு தெரிவிப்பதாக பதிலளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜனவரி 31-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் ஆணையர் நியமன சட்ட திருத்த மசோதா… திமுக கடும் எதிர்ப்பு!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு போலீஸ் கஸ்டடி!

fake passport case no evidence

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share