வெள்ளத்தில் பழுதான வாகனங்கள்: உதவி எண்கள் அறிவிப்பு!

Published On:

| By Selvam

damaged vehicle helpline number announcement

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், வாகனத்தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், வாகனங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத்தயாரிப்பு, நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.

இந்தநிலையில் வெள்ளத்தில் பழுதடைந்த வாகனங்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜயகாந்த் டிஸ்சார்ஜ்: மருத்துவமனை அறிக்கை!

வாகனங்கள் விலையை 3 சதவிகிதம் உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share