சென்னையில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை!

Published On:

| By Selvam

chennai it ed searches

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள சக்தி ரசாயன ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 29) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பெரு நிறுவனங்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் மணல் குவாரிகள் தொடர்புடைய இடங்கள், பிரணவ் ஜூவல்லர்ஸ் போன்ற நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்தநிலையில் சென்னை அண்ணா சாலை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னை அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள சக்தி கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளும், புரசைவாக்கம் கிளெமென்ஸ் சாலையில் உள்ள ஜெயின் வில்லா மற்றும் டி.வி.ஹெச் லும்பானி அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் டி.வி.ஹெச் லும்பானி அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் அரசு ஒப்பந்தங்களுக்கு மின் சாதனங்களை விநியோகம் செய்து வரும் அமித் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னையில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை: இரவு நேர மின்சார ரயில் இன்று முதல் ரத்து!

கூட்டுறவுத் துறையின் ஆள் தேர்வு மையங்களை கலைக்க வேண்டும்: ராமதாஸ்  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share