இன்று தொடங்குகிறது சென்னை திருவிழா!

Published On:

| By Monisha

சென்னை தீவுத்திடலில் ”சென்னை திருவிழா 2023” இன்று (ஏப்ரல் 28) தொடங்குகிறது.

இன்று முதல் மே 15 ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில், “சென்னை திருவிழா 2023, சர்வதேச கைத்தறி, கைவினை மற்றும் உணவுத் திருவிழா இன்று தொடங்குகிறது.

இன்று மாலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைக்க உள்ளார் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் திருவிழாவில் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக சென்னை திருவிழா கண்காட்சியில் பூட்டான், நைஜீரியா, வங்க தேசம், ஈரான், நேபாளம், தென் ஆப்ரிக்கா, இலங்கை, உகாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளார்கள்.

இதில் 20 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் பொருட்களை 80 அரங்குகளில் காட்சிப்படுத்துவார்கள் என்றும், தமிழகத்தில் இருந்து 70 ஸ்டால்கள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்களும் இங்கு முன்னிலைப்படுத்தப்படும். சில பொருட்கள் தயாரிக்கப்படும் விதம் குறித்தும் கண்காட்சியில் செய்து காண்பிக்கப்பட உள்ளது.

மோனிஷா

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: வைரமுத்து வருத்தம்!

மந்தமான பொன்னியின் செல்வன்-2 டிக்கெட் விற்பனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel