சென்னை தினம்: ஆளுநர் வாழ்த்தில் சர்ச்சை!

Published On:

| By Jegadeesh

சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ் தினம்’ எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் வாசல் என்று அழைக்கப்படும் சென்னையின் 384- வது தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை தினமான இன்று பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வரும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ்’ தின வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஆகஸ்ட் 22) எக்ஸ் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்ட பிறகு, தமிழில் ‘சென்னை தினம்’ என்றே கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மெட்ராஸ் எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

முன்னதாக, 1996 ஜூலை 17-ல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், ‘மெட்ராஸ்’ அதிகாரபூர்வமாக ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தமிழகம் முழுக்க போராட்டத்தில் இறங்கிய பகுதி நேர ஆசிரியர்கள்! 

”நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற”- வைரமுத்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel