கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

Published On:

| By Minn Login2

இந்த வீக் எண்ட்டில் ஹோட்டலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை

குடமிளகாய் – 3 (பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணம்)
சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 2 (வேகவிட்டு எடுத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும்)
சீஸ் துருவல் – ஒரு கப்
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – கால் கப்
சதுரமாக நறுக்கிய கேரட் – கால் கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது போட்டு வதக்கவும். இதனுடன் கேரட், உப்பு, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும். மசாலா ரெடி.

குடமிளகாயை எடுத்துக்கொண்டு மேற்புறம் (மூடி மாதிரி) வெட்டிக் கொள்ளவும் (பார்க்க படம்). கீழ்ப்புறம் (அடிபாகம்) இருக்கும் குடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு வெஜ் மசாலாவை நிரப்பவும், மூன்று குடமிளகாய்களில் நிரப்பிக்கொண்டு அதன் மீது சீஸைச் சரிசமமாகப் பிரித்துப்போடவும்.

ஒரு பானில் (pan) எண்ணெய் விட்டு, சூடானதும் மிதமான தீயில் அடுப்பை வைத்து தயார் செய்துள்ள குடமிளகாய்களை அதில் வைத்து ஃப்ரை செய்யவும். எல்லா பக்கமும் நன்கு வேக வேண்டும்.

சிறிது நேரம் மூடி வைத்தும் வேகவிடவும். எல்லா பக்கமும் ஃப்ரை ஆனவுடன் அடுப்பை நிறுத்திப் பரிமாறவும்.

குறிப்பு:

அவனில் (oven) செய்வதாக இருந்தால், டிரேயில் இந்தக் குடமிளகாய்களை அடுக்கி 15 நிமிடங்கள் பிரீஹீட் செய்த அவனில் 160 டிகிரி செல்ஷியசில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். குடமிளகாய் அளவைப் பொறுத்து வேகும் நேரம் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் ஊறுகாய்

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel