22வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
டெல்டா பாசனத்திற்காக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட டிஎம்சி அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு காவிரி நீரை முறையான அளவிற்கு திறந்து விடுவதில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கடந்த ஜூலை 5 மற்றும் ஜூலை 20 ஆகிய இரு தேதிகளில் சந்தித்து பேசினார்.
அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கடிதத்தையும் வழங்கினார் அமைச்சர் துரைமுருகன். மேலும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி 22வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மோனிஷா
கோடிக்கணக்கில் கடன்… கைவிட்டு போன கம்பெனி: பிரபல கலை இயக்குநர் தற்கொலை!