அமைச்சர் மா.சுப்பிரமணியன் டிஸ்சார்ஜ்!

Published On:

| By Selvam

தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஓமந்தூரார் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆகஸ்ட் 30) அதிகாலை நடைப்பயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டது.

உடனடியாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு (Coronary angiogram) இருதய இரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

அமைச்சருக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

’அலங்கு’ ஃபர்ஸ்ட் லுக்: சொல்ல வருவது என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share