2024 மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை முன்னிட்டு, அதில் பங்குபெறும் அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களைப் பாதிக்கும் சமூக வலைதள பதிவுகளைத் தடுக்க ஏஐ மென்பொருளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று(அக்டோபர் 3)வெளியிட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024 அக்டோபர் 3 முதல் 20 வரை நடக்கவிருந்தது. ஆனால் அங்குள்ள அரசியல் சூழல் போட்டி நடத்துவதற்கு ஒத்துவராததால், மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டது.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 10 அணிகள் விளையாடவுள்ளன.
இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணி அளவில் இந்த மகளிர் உலகக்கோப்பை தொடங்க உள்ளது. ஷார்ஜாவில் நடக்கவிருக்கும் முதல் போட்டியில் வங்கதேசம் ஸ்காட்லேண்ட் அணியுடன் மோதவிருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மோதவுள்ளது. இதுவும் ஷார்ஜாவில்தான் நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை வருகிற 20ஆம் தேதி முடிவடையும்.
பொதுவாக எந்த விளையாட்டுப் போட்டி ஆயினும் சரி, பார்வையாளர்கள் போட்டியின் போக்கைப் பற்றி சமூக ஊடகங்களில் பார்வையாளர்கள் பதிவிடுவது வழக்கம்.
அதுவும் விளையாட்டு வீரர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கே சென்று, நடந்துகொண்டிருக்கும் போட்டியைப் பற்றின தங்களது கருத்துகளைப் பதிவிடுவது சமீபமாக அதிகரித்துள்ளது. எதிர்மறையான கருத்துகள் பல சமயங்களில் விளையாட்டு வீரர்களின் மனநிலையைப் பாதிப்பது உண்டு.
இதைத் தடுக்கும் விதமாக, கோ பபில் (GoBubble) என்கிற நிறுவனத்தின் உதவியுடன் ஏ.ஐ. மென்பொருளைச் சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ICC) உருவாக்கியுள்ளது.
இந்த மென்பொருள் சர்வதேச கிரிகெட் வாரியத்தின் ஃபேஸ்புக், யூடியூப், போன்ற சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இந்த சேவைக்குப் பதிவு செய்துள்ள மகளிர் கிரிக்கெட் வீரர்களின் சமூக வலைதள பக்கங்களிருந்து தேவை இல்லாத பதிவுகளை நீக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஈஷா மையத்தில் விசாரணை : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்!
ரஜினி படம் முதன் முதலாக ஒரு நாட்டில் வெளியாகிறது… எந்த நாடு தெரியுமா?
நடிகை சமந்தா குறித்து ஆந்திர அமைச்சர் பேசியது என்ன? கொந்தளிக்கும் திரையுலகம்