மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்த வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியின் 15 ஆண்டுகால ஏக்கத்திற்கு விடை கொடுத்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்று வரும் ஐபில் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஜாம்பவான் சச்சினின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார்.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசனும், குர்பாஸும் களமிறங்கினர்.
இதில் தடுமாறிய ஜெகதீசன், ஹிரித்திக் சோகீன் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து குர்பாஸ் 8 ரன்னிலும், கேப்ரன் நிதிஷ் ராணா 5 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
வெங்கடேஷ் அய்யர் முதல் சதம்
எனினும் களம் இறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் இது அவரது முதலாவது சதமாகும்.
மேலும் இந்த சதத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 15 ஆண்டுகால காத்திருப்பை முடித்து வைத்தார்.
முன்னதாக 2008 ஆம் ஆண்டு துவங்கிய முதல் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்த அணி வீரர் பிரண்டன் மெக்கலம் 158* ரன்கள் குவித்திருத்தார்.
அதன்பிறகு கேகே.ஆர். அணி சார்பில் கடந்த 15 வருடங்களாக ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை. அதிகப்பட்சமாக கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 97* ரன்கள் குவித்து இருந்தார்.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்காக சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வெங்கடேஷ் அய்யர்.
எனினும் சதமடித்து அடுத்த 2 பந்துகளை சந்தித்த நிலையில் 104 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இதில் 9 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.
இறுதியாக, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்த்துள்ளது.
அதனைத்தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி உள்ள நிலையில் 186 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி: முதல்வர் நிதியுதவி!
