டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி புதிய சாதனை!

Published On:

| By indhu

T20 World Cup: Indian team set a new record against Pakistan

INDvsPAK : டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 7 வெற்றிகளை பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன். இதற்கான போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 9) இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது டி20 உலகக்கோப்பையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அந்த வகையில் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திற்கு எதிராக 6 வெற்றிகளையும், இலங்கை அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 6 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுரேஷ் கோபி ராஜினாமா? : அவசரமாக அமைக்கப்பட்டதா மோடி 3.0 அமைச்சரவை!

’ஈபிஎஸ் 5 நிமிடம் யோசித்தால் அதிமுகவிற்கு விடிவுகாலம்’ – புகழேந்தி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel