கோலி சாதனையை சமன் செய்து வரலாறு படைத்த சூர்யகுமார்

Published On:

| By christopher

2024 டி20 உலகக்கோப்பை தொடரில், லீக் சுற்று ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து, ‘சூப்பர் 8’ சுற்றில் ‘குரூப் 1’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, இந்த சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் (53 ரன்கள்) மற்றும் ஹர்திக் பாண்டியா (32 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் சேர்த்தது.

பின், 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான், ஜஸ்ப்ரிட் பும்ரா (3 விக்கெட்) மற்றும் அர்ஷ்தீப் சிங் (3 விக்கெட்) ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இப்போட்டியில் ‘ஆட்ட நாயகன்’ விருதை சூர்யகுமார் யாதவ் கைப்பற்றினார். அவர் 3 சிக்ஸ், 5 ஃபோர்களுடன் 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்திருந்தார்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 15வது ஆட்ட நாயகன் விருதை வெல்லும் சூர்யகுமார் யாதவ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

விராட் கோலியும் தற்போது வரை சர்வதேச டி20 போட்டிகளில் 15 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள நிலையில், அவருடன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி தற்போது வரை 121 டி20ஐ போட்டிகளில் விளையாடி 15 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் இந்த இலக்கை 64 போட்டிகளிலேயே எட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

கள்ளச்சாராய விவகாரம்: அமைச்சர்கள் குழு முதல்வருடன் சந்திப்பு!

விமானப் போக்குவரத்துத் துறையில் 25% பெண் பணியாளர்களை நியமிக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share