இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போலவே, அதற்கு முன்னதாக நடைபெறும் ஏலமும் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அதன்படி 2023ம் ஆண்டு தொடருக்கான ஐபிஎல் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தை உலகளவில் ஏலம் விடுவதில் பெயர் பெற்றவரான ஹியூக் எட்மீடஸ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஏலத்திற்கு வந்த முதல் 7 வீரர்களின் நிலையை இங்கு காண்போம்.
ஏலத்தில் முதல் நபராக நியூசிலாந்து கேப்டன் கேனே வில்லியம்சன் கொண்டுவரப்பட்டார். அவரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.
இரண்டாவதாக இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக் அடிப்படை விலையாக ரூ.1.5 கோடிக்கு அறிவிக்கப்பட்டார்.

அவரை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் போராடிய நிலையில், இறுதியில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்திய வீரர் மயங்க் அகர்வாலையும் ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.
மற்றொரு இந்திய வீரர் அஜிங்கிய ரகானேவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோஸ்ஸோவ் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
மொத்தமுள்ள 405 வீரர்களில் 7 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணி ரூ.21.50 கோடியை செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
பொங்கலுக்கு ரூ.5000 வழங்குக: எடப்பாடி பழனிசாமி
ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்: மாநில அரசு உரிமை பற்றி விளக்கம்!