கடந்த அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில், ப்ரோ கபடி தொடரின் 10வது சீசனுக்கான ஏலம் மும்பையில் நடைபெற்ற நிலையில், அந்த தொடர் வரும் டிசம்பர் 2 அன்று கோலாகலமாக துவங்க உள்ளது. Pro Kabaddi 2023 Schedule
இந்த 10வது சீசன் ப்ரோ கபடி தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், பட்னா பைரட்ஸ், புனெரி பல்டன்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யூ மும்பா, உ.பி யோதாஸ் என 12 அணிகள் பங்குபெற உள்ளன.
டிசம்பர் 2 துவங்கவுள்ள இந்த 10வது சீசனின் முதல் போட்டியில், குஜராத் ஜெய்ன்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதிக்கொள்ள உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி டிசம்பர் 3 அன்று தனது முதல் போட்டியில் தபாங் டெல்லி கே.சி அணியை எதிர்கொள்ள உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணியின் முழு போட்டி அட்டவணை:
டிசம்பர் 3 – vs தபாங் டெல்லி கே.சி
டிசம்பர் 10 – vs பெங்கால் வாரியர்ஸ்
டிசம்பர் 13 – vs தெலுங்கு டைட்டன்ஸ்
டிசம்பர் 17 – vs யூ மும்பா
டிசம்பர் 22 – vs பாட்னா பைரட்ஸ்
டிசம்பர் 23 – vs ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ்
டிசம்பர் 25 – vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
டிசம்பர் 27 – vs குஜராத் ஜெய்ன்ட்ஸ்
டிசம்பர் 31 – vs பெங்களூரு புல்ஸ்
ஜனவரி 7 – vs புனெரி பல்டன்ஸ்
ஜனவரி 10 – vs உ.பி யோதாஸ்
ஜனவரி 14 – vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
ஜனவரி 16 – vs பாட்னா பைரட்ஸ்
ஜனவரி 21 – vs பெங்களூரு புல்ஸ்
ஜனவரி 24 – vs தெலுங்கு டைட்டன்ஸ்
ஜனவரி 28 – vs யூ மும்பா
ஜனவரி 31 – vs ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ்
பிப்ரவரி 4 – vs குஜராத் ஜெய்ன்ட்ஸ்
பிப்ரவரி 6 – vs உ.பி யோதாஸ்
பிப்ரவரி 11 – vs புனெரி பல்டன்ஸ்
பிப்ரவரி 14 – vs தபாங் டெல்லி கே.சி
பிப்ரவரி 18 – vs பெங்கால் வாரியர்ஸ்
தமிழ் தலைவாஸ் அணி விவரம்:
ரைடர்ஸ்
அஜின்க்யா பவார்
நரேந்தர்
ஹிமான்ஷு
ஹிமான்ஷு சிங்
லட்சுமணன் மாசானமுத்து
கே செல்வமணி
ஜதின்
விஷால் சாஹல்
நிதின் சிங்
சதீஷ் கண்ணன்
டிபெண்டர்கள்
சாகர் ராதே
சாஹில் குலியா
ஹிமான்ஷு
எம்.அபிஷேக்
அமீர்ஹுசைன் பஸ்டாமி
முகமதுரீஷா கபோட்ரஹாங்கி
மோஹித்
ஆஷிஷ்
ரோனக்
நிதிஷ் குமார்
ஆல் ரவுண்டர்கள்
ரித்திக் Pro Kabaddi 2023 Schedule
கடந்த சீசனில் ஆஷான் குமார் பயிற்சியில், சாகர் ராதே, அஜின்கியா பவார், நரேந்தர் உள்ளிட்டோர் அதிரடியால், ப்ரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணி, புனெரி பல்டன்ஸ் அணியிடம் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் இம்முறை, தமிழ் தலைவாஸ் முதல் முறையாக அந்த கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.