செம இண்டர்வெல், வொர்ஸ்ட் கிளைமாக்ஸ்… சொதப்பல் வீரரால் ரசிகர்கள் வேதனை!

Published On:

| By Manjula

bengal warriors defeat tamil thalaivas

தன்னுடைய இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணியின் சார்பில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடி வருகிறது.

கடந்த டிசம்பர் 3-ம் தேதி தபாங் டெல்லி உடனான முதல் போட்டியில், அஜிங்கியாவின் சூப்பர் ஆட்டத்தால் தமிழ் தலைவாஸ் அணி முரட்டுத்தனமான முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதனால் நேற்று (டிசம்பர் 10) விளையாடிய இரண்டாவது போட்டியிலும் அந்த அணி மீண்டுமொரு வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அதற்கு ஏற்ப முதல் பாதியில் 27 பாயிண்டுகளை எடுத்து முன்னணியில் இருந்தது. மறுபுறம் பெங்கால் வாரியர்ஸ் அணி 21 பாயிண்டுகள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் வெற்றி வாய்ப்பு தமிழ் தலைவாஸ் அணியின் பக்கம் தான் அதிகம் இருந்தது.

குறிப்பாக முதல் பாதியில் இரண்டு முறை பெங்கால் அணியை தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் செய்திருந்தது. ஆனால் சொதப்புவதில் பெயர் போன தமிழ் தலைவாஸ் வழக்கம்போல ஆட்டத்தின் முடிவில், 11 பாயிண்டுகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

இதைப்பார்த்த ரசிகர்கள் அநியாயமாக இப்படி கைக்கு வந்த வெற்றியை நழுவ விட்டு விட்டீர்களே? என சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் நரேந்தரும், அஜிங்கியாவும் நன்றாக ஆடினாலும் மற்றொரு வீரரான அபிஷேக் நன்றாக பெர்பாமன்ஸ் செய்யவில்லை.

இதனால் அவருக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் என, தமிழ் தலைவாஸ் அணிக்கு சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா

இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, தனி இறையாண்மை கிடையாது: தீர்ப்பை வாசிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

எண்பது மணி நேர கானக வாசம் ! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share